எங்கள் கதை

2008 முதல்
தமிழுக்காக பயணம்

7 பெண்களால் தொடங்கி, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி பெற்றுள்ள குமூக மாற்றத்திற்கான பண்பாட்டு இயக்கம்.

எங்களைப் பற்றி

தமிழகப் பெண்கள் செயற்களம்

தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற இந்த அமைப்பு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏழு பெண்களால் மட்டும் தொடங்கப்பட்டு, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி பெற்றுள்ள குமூக (சமூக) மாற்றத்திற்கான ஒரு பண்பாட்டு இயக்கமாகும்.

நம் தமிழ் குமுகத்தின் (சமூகத்தின்) மொழியும் வரலாறும் பண்பாடும் அழிந்து கொண்டே வரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளது தமிழகம்.

தன் இன வரலாற்றை மறந்த இனம் வரலாற்றில் மறைந்தே போகும்!

என்பதை எண்ணியே — நம் தமிழ்க் குமுகத்தின் வருங்கால தலைமுறைகள் நம் தமிழ் மொழி, மொழி சார்ந்த மக்கள் நிலங்கள், வளங்கள், பண்பாடு, கலை, அறிவியல், இலக்கணம், இலக்கியம் என அனைத்து நம் அடையாளங்களையும் காத்து நிற்கின்ற தலைமுறைகளாக வளர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது தமிழகப் பெண்கள் செயற்களம்.

அடுத்த நம் தலைமுறை பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பிலும் கடமையிலும் இருக்கும் பெண்களால் மிகப்பெரிய குமுக (சமூக) மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது தமிழகப் பெண்கள் செயற்களம்.

வரலாற்றை அறிய

  • தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி
  • தமிழர் வரலாறு வினா விடை போட்டி
  • வரலாறு வகுப்புகள்

பண்பாட்டை நிலைநிறுத்த

  • கலக்க வராங்க தமிழ் பசங்க! — தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சி
  • பொங்கல் விழா!
  • பண்பாட்டு விழாக்கள்!

மொழி வளர்ச்சியில்

  • மொழிப்போர் நாள் நினைவேந்தல்
  • தாய்மொழி நாள் விழா!
  • தமிழ்நாடு நாள் விழா!
  • எங்கும் தமிழ் எதிலும் தமிழ் — கள செயல்பாடுகள்
  • தமிழ் சார்ந்த கருத்தரங்கங்கள், கலந்தாய்வுகள்

தமிழர் விளையாட்டுகளை ஊக்குவிக்க

  • சிலம்பம் பயிற்சி வகுப்புகள்
  • சிலம்பம் போட்டிகள்
  • பறை பயிற்சி வகுப்புகள்
  • நாட்டுப்புற நடன பயிற்சி வகுப்புகள்

பெண்களை ஒன்றிணைக்கும்

  • மகளிர் நாள் விழா!
  • பெண்ணே பேசு! — கருத்தரங்கங்கள், கலந்தாய்வுகள்
  • மகளிர் விழிப்புணர்வு முகாம்கள்!
  • மருத்துவ முகாம்கள்
  • தொழில் பயிற்சி முகாம்கள்
  • பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள்

என பல வகையிலும், வழிகளிலும், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் குமூக ஆர்வலர்களையும் சென்றடைந்துள்ளோம்.

இனியும் சென்றடைவோம்!