தமிழ்மொழி வளர்ச்சி

தமிழ்மொழி வளர்ச்சி

  • Home
  • தமிழ்மொழி வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள்

ஊர்திகளில் தமிழ் எண்

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்"
செம்மொழியான தமிழ் - என்று பேச்சளவில் இல்லாமல் அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு வர எண்ணி அமைப்பின் முதல் செயல்பாடாக, இரண்டு சக்கர ஊர்திகள், தானிகள்(ஆட்டோ), மகிழுந்து (கார்) போன்ற வண்டிகளில் உள்ள ஆங்கில எழுத்துக்களை மாற்ற எண்ணி - சென்னையில் பல பகுதிகளில் முகாமிட்டு பரப்புரை செய்து வண்டி உரிமையாளர்களின் ஒப்புதலுடன் இதுவரை கிட்டதட்ட 3000 வண்டிகளில் எழுதியுள்ளோம். இப்பணி இதுவரை தொடர்கிறது.

தமிழர் வரலாறு  வினா விடைப் போட்டி | தமிழகப் பெண்கள் செயற்களம் | Seyarkalam
தமிழர் வரலாறு  வினா விடைப் போட்டி | தமிழகப் பெண்கள் செயற்களம் | Seyarkalam

வணிகப் பெயர்பலகைகளில் தமிழ்

"தமிழ்நாட்டின் தெருக்களில் தமிழ்தான் இல்லை"
என்கின்ற பாவேந்தரின் ஏக்கத்தை போக்கிட எண்ணி களத்தில் இறங்கினோம் 2010 - செம்மொழி மாநாட்டின் போது 'வணிக பெயர்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்' என்ற தமிழக அரசின் ஆணையை வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் ஐயா வெள்ளையன் அவர்களின் துணையோடு சென்னையின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு கடையாகச் சென்று அக்கடைகளுக்குரிய 'ஆங்கிலப் பெயரை மாற்றி தமிழ்ப்பெயராக வணிகர்களிடம் மாற்ற வேண்டினோம். (எ.கா) (டீ கடை - தேநீர்கடை / பேக்கிரி - அடுமனை, வெதுப்பகம்/ ஹார்டுவேர்ஸ் - வன்பொருளகம்) என்று ஒவ்வொன்றையும் தமிழிலேயே மாற்றம் செய்து எழுதிக்கொடுத்தோம். அதன்படியே சென்னையில் 90% கடை நிறுவனப் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்ய்யப்பட்டது. இப்பணி இதுவரை தொடர்கிறது.

கோயில் வழிப்பாடுகளில் தமிழ்

"தமிழகக் கோயில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு"
நாம் வேண்டுமென்று கேட்டால் மட்டுமே வேற்று மொழியில் வழிபாடு! என்ற நிலையை உருவாக்க அமைப்பின் சார்பாக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக கோயில்களில் நிலையான வழிபாடு தமிழிலா ? வேற்றுமொழியிலா ? என்ற கேள்வியோடு பொதுகக்களிடம் நேரிடையாகவும் / இணையதளம், மின்னஞ்சல் வழியாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 99% விழுக்காடு தமிழிலில்லேயே வழுபாடு நடத்த வேண்டும் என்றே முடிவு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் 'தமிழில் வழிபாடு செய்ய வேண்டும்' என்ற விழிப்புணர்வையும் மக்களிடம் பரப்புரை செய்து வருகிறோம்.

தமிழர் வரலாறு  வினா விடைப் போட்டி | தமிழகப் பெண்கள் செயற்களம் | Seyarkalam

Not A Member? Connect With Us..