தமிழர்களின் பழமையான கலைகள் எல்லாம் அழிந்துபோகா வண்ணம் காத்து அதை வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்த்து தமிழகப் பெண்கள் செயற்களத்தின் சார்பாக 'போர்வாள் கலைக்குழு' என்ற பெயரில் கலைக்குழு ஒன்றை ஏற்படுத்தி அதன்வழி இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு சிலம்பாட்டம், பறையாட்டம், நாட்டுப்புற நடனங்கள், ஓவியம், பாட்டு, விழிப்பிணர்வு நாடகங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கலைகளை கற்றறிந்த மாணவர்கள் எதிர்காலத்தில் பல கலைக் குழுக்களை ஏற்படுத்தி தமிழர்களின் தொன்மை கலைகளை வளர்த்தெடுப்பார்கள்.
தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் ஒன்று சிலம்பாட்டம், இச்சிலம்பாட்ட பயிற்சி சென்னையில் 5 இடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. (மயிலை, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கே.கே.நகர், மேடவாக்கம்) மொத்தம் 121 மாணவர்கள் இக்கலையை கற்று வருகிறார்கள். வரும் காலங்களில் இக்கலையை மேலும் பல இடங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் முதன்மைக் கலைகளில் சிறப்பானது 'தப்பாட்டம்' இத்தப்பாட்டக் கலையும் போர்வாள் கலைக்குழு மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. இத்தப்பாட்ட பயிற்சி. மயிலாப்பூர், கே.கே.நகர் ஆகிய இரண்டு இடங்களில் நடக்கிறது. இதில் 24 மாணவர்கள் பங்குபெற்று இக்கலையை கற்றுக் கொண்டு வருகின்றனர். எதிர்காலத்தில் மேலும் பல பகுதி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'போர்வாள் கலைக்குழு' மாணவர்களுக்கு ஓவியப்பயிற்சி, தமிழிசை பாடல்கள் முற்போக்கு கருத்துக்களைக் கொண்ட விழிப்புணர்வு நாடகங்கள் ஆகிய பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. விடாது மக்களிடம் பல அரிய கருத்துக்களை இவ்விழிப்புணர்வு பாடல்கள், நாடகங்கள் வழியாக தெருமுனை நாடக வடுவில் கொண்டு செல்லப்படுகிறது.
சிலம்பாட்டம், பறையாட்டம் இவற்றுடன் காவடியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்களும், சிந்தனைகளை தட்டி எழுப்புகிற எழுச்சி நடனங்களும், போர்வாள் கலைக்குழு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுகிறது. இக்க்கலைக்குழுவினர் பொங்கல் விழா, புத்தாண்டு விழா, பண்பாட்டுக் கண்காட்சி போன்ற விழாக்களில் இக்கலைகளை அரங்கேற்றி மக்களை மகிழ்விக்கிறார்கள்.
உடல் நல்வாழ்வுக்கும், மன அமைதிக்கும், மூலைப்பயிற்சிக்குமான கலையாக தமிழர்களின் ஓகக் கலை விளங்குகிறது. இவ்வோகப்பயிற்சி போர்வாள் கலைகுழு மாணவர்களுக்கும், பெண்களுக்கும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. மயிலாப்பூரில் மட்டுமே தற்போது நடத்தப்படும் இப்பயிற்சி வரும் காலங்களில் மேலும் பல இடங்களில் விரிவடைய உள்ளது