எங்களைப் பற்றி

எங்களைப் பற்றி

அமைப்பின் பெயர் : தமிழகப் பெண்கள் செயற்களம்
தொடக்கம்: 2006 - ஆம் ஆண்டு சூன் மாதம் 11-ஆம் நாள் ஏழு பெண் உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. இன்று 50 பெண் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
பதிவு :இவ்வமைப்பு சங்க சட்டத்திற்கு கீழ் "சங்கமாக" பதிவுசெய்யப்பட்டுள்ளது
நோக்கம் :தமிழர்களின் - நிலம், மொழி, பண்பாடு. கலை, இலக்கியம், தமிழர்களின் விளையாட்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இவற்றை வளர்த்தெடுப்பதற்கான செயல்பாட்டுக் களமாக இயங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
           "தமிழ் வாழ்க!! வளர்க!!
            எங்கும் தமிழ்!! எதிலும் தமிழ்!!

- என்று பேச்சளவில் நிற்காமல், நடைமுறைப்படுத்த களத்தில் இறங்கி செயல்பட எண்ணியே தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற பெயர் சூட்டப்பட்டது.அமைப்பின் செயல்பாடுகள்

அமைப்பின் செயல்பாடுகள்Ucuz kiralık araç